search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் திருட்டு"

    • சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது64).

    இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர் கவுண்டனூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராவார்.

    இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

    அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட ரூ.5. லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து சாம்பசிவம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

    மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • 11 பவுன் எடை கொண்டது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் -இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பா ற்கடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 34) என்பது தெரியவந்தது.

    மேலும் கடந்த ஜூன் 12-ந் தேதி குடியாத்தம் அடுத்த மேல் பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது அவரிடம் இருந்து 11 பவுன் எடை கொண்ட 43 தங்கத் தாலிகளை திருடியது தெரிந்தது.

    ேமலும் உள்பட வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பஸ்ஸில் பயணம் செய்த பல்வேறு பயணிகளிடம் நகைகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுடார்.

    இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஹட்கோ அருகேயுள்ள கதிரேபள்ளி பகுதியை சேர்ந்தவர் குடியப்பா (வயது 45). இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

    இது குறித்து குடியப்பா கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.

    • இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்.
    • இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா (50) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 33/4 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு போனது.
    • இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 41 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. மேலும் வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் இருக்கின்றன.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது கோவில் நடை திறந்து கிடந்தது.

    மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரிடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரிடம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

    யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிரு ப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கம்பி வேலியை வெட்டி அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    அதன் அடிப்படையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர்.
    • மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை திருடி சென்று விட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிவன் புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜய ராணி(66). இவர் தனது தம்பி வீட்டுக்கு கடந்த 22-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்று விட்டு 23-ந் தேதி காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்கச்செயின், 9 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காரமடை இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    ×